×

‘நிவர் புயல் நடவடிக்கைகள்’ – சென்னை மாநகராட்சிக்கும், தமிழக அரசுக்கும் குவியும் பாராட்டுக்கள்!

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு 11 மணிக்கு மரக்காணம் – புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இந்த புயல் கடலோர மாவட்டங்களையும் புதுச்சேரியையும் கடுமையாக தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளில் களமிறங்கியது. மக்களை முகாம்களில் தங்க வைப்பது, முன்கூட்டியே மரங்களை வெட்டுவது, பேரிடர் மீட்புக் குழுவை வரவழைப்பது, நீர் வெளியேற்றும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
 

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு 11 மணிக்கு மரக்காணம் – புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இந்த புயல் கடலோர மாவட்டங்களையும் புதுச்சேரியையும் கடுமையாக தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளில் களமிறங்கியது.

மக்களை முகாம்களில் தங்க வைப்பது, முன்கூட்டியே மரங்களை வெட்டுவது, பேரிடர் மீட்புக் குழுவை வரவழைப்பது, நீர் வெளியேற்றும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

அதே போல, சென்னை மாநகராட்சியும் மக்களை காக்கவும், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு மீண்டும் நிகழாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் விளைவாக, நிவர் புயலால் சென்னையில் பாதிப்பு குறைவாகவே இருந்தது. பல இடங்களில் மின்தடை இருப்பினும் சாய்ந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நிவர் புயலை எதிர்கொள்ள அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்ட சென்னை மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

வெள்ள நீரை அகற்றுதல் துவங்கி, சாய்ந்த மரங்களை அகற்றும் வரை உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்ட சென்னை மாநகராட்சி, வருவாய் துறை மற்றும் மின்துறையை போற்றி மக்கள் பேசி வருகின்றனர்.