×

விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி பேரணி

 

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.


விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு கருப்பு நிற உடையுடன் தேமுதிகவினர் அமைதி பேரணி சென்றனர். எல்.கே.சுதீஷ், தனது மகன்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் நோக்கி அமைதி பேரணியாக சென்றார் பிரேமலதா விஜயகாந்த். அவருடன் நூற்றுக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் பேரணியாக சென்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.