×

இயக்குநர் சுசிகணேசன் வழக்கில் கவிஞர் லீனா மணிமேகலை பாஸ்போர்ட் முடக்கம் – ரத்து செய்யக்கோரி மனு

விரும்புகிறேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுசி கணேசன். எழுத்தாளரும் பத்திரிகையாளருமான இவர் விரும்புகிறேன் படத்தை அடுத்து பைவ் ஸ்டார் படத்தை இயக்கினார். தொடர்ந்து கந்தசாமி, திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவர் மீது கவிஞரும் இயக்குனருமான லீனா மணிமேகலை மீ டூ இயக்கம் மூலமாக பாலியல் புகார் கூறினார். இதையடுத்து இயக்குநர் சுசி கணேசன் லீனா மணிமேகலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில்
 

விரும்புகிறேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுசி கணேசன். எழுத்தாளரும் பத்திரிகையாளருமான இவர் விரும்புகிறேன் படத்தை அடுத்து பைவ் ஸ்டார் படத்தை இயக்கினார். தொடர்ந்து கந்தசாமி, திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவர் மீது கவிஞரும் இயக்குனருமான லீனா மணிமேகலை மீ டூ இயக்கம் மூலமாக பாலியல் புகார் கூறினார்.

இதையடுத்து இயக்குநர் சுசி கணேசன் லீனா மணிமேகலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.

இதனால் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதையடுத்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்கி செப்டம்பர் 9ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தற்போது இந்த உத்தரவினை எதிர்த்து லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆராய்ச்சிக்காக தான் கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்பதற்காக பாஸ்போர்ட் முடக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

லீனா மணிமேகலையின் மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், மண்டல பாஸ்போர்ட் அலுவலர் இரண்டு வாரங்களில் இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு இருக்கிறார்.