விஎஸ் பாபு மறைவு - தவெக சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு
கொளத்தூர் தொகுதி தவெக எம். எல். ஏ. வி. எஸ். பாபு மறைவை அடுத்து தவெக சார்பில் அடுத்த 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தவெக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், வி.எஸ்.பாபு மறைவையொட்டி தவெக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தவெக பொதுச்செயலர் ஆனந்த் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, 7 நாட்கள் தவெகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தவெக பொதுச்செயலர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 22 வரை அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல்நலன் தேறி வருவதாகவும் மருத்துவ அறிக்கைகள் வந்தன. அதன்பின் எந்த மருத்துவ அறிக்கையும் வெளியாகவில்லை. கிட்டத்தட்ட 70 நாட்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் இன்று கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு உயிரை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது எதுவும் பலனளிக்கவில்லை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.