☰
×

செஃப் தாமு மறைவு- முதலமைச்சர் விஜய் இரங்கல்

 

கின்னஸ் உலக சாதனை படைத்தவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செஃப் தாமுவின் மறைவு சமையல் கலைத்துறைக்கு பேரிழப்பாகும் என முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட… pic.twitter.com/tZb06TSUxl

— CMOTamilNadu (@CMOTamilnadu) October 25, 2026


இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், "பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" 
எனக் குறிப்பிட்டுள்ளார்.