×

பயணிகள் அவதி..! முடங்கியது IRCTC இணையதளம்..!!

 
தீபாவளியை ஒட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பவர்களால் ரெயில்வே (IRCTC) இணையதளம் முடங்கி உள்ளது.
காலை 11 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய பலரும் முயற்சி செய்ததால் ரெயில்வே இணையதளம் முடங்கியது. தீபாவளியை ஒட்டி நாளை (அக்.18) பயணிக்க தட்கல் முன்பதிவுக்கு காத்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்ய இயலாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.