விஜய்யை சீண்டிய பார்த்திபன் பதிவு..! தன் சினிமா புகழை அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர் அஜித்..!
நடிகர் பார்த்திபன் ஒரு நேர்காணலில் அஜித்தைப் பற்றி பேசிய பழைய வீடியோ ஒன்று எக்ஸ் பக்கத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் பார்த்திபன், “அஜித் ஒரு தனித்துவமான நபர். அவரின் முடிவெடுக்கும் திறமை மிகத் தெளிவானது” என்று கூறியிருந்தார். அந்த வீடியோ மீண்டும் வைரலான நிலையில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அதை பகிர்ந்து, பதிவிட்ட பார்த்திபன், "decision ma'KING' Ajith தான்! சலனமே இல்லாத மனிதர். கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும். பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர். தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர். எனவே promotionக்கு கூட வராமல், தனக்கான உலகத்தில் பயணிக்கும் ஞானி மனநிலை மனிதர். ஆச்சர்யமான அபூர்வப் பிறவி. எல்லோருக்கும் நல்ல நண்பர்> எனக்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக ரசிகர்களை பயன்படுத்தி வருவதாக சிலர் விமர்சித்து வரும் நேரத்தில், பார்த்திபனின் இந்த கருத்து விஜயை மறைமுகமாக சாடியுள்ளதாக கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.