குழந்தைகளிடம் இந்த பொருட்களை கொடுத்தால் பெற்றோர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை! வெளியான அதிரடி உத்தரவு
18 வயது நிரம்பாத குழந்தைகளிடம் கார், பைக்குகளை இயக்க அனுமதித்தால் பெற்றோர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளின் பயணத்திற்காக தனியார் பள்ளிகளால் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் அதை சார்ந்த வாகனங்களை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதன்படி மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட அன்னூர் வட்டாரத்தில் 85 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று நடந்தது. மேட்டுப்பாளையம் வட்டாரத்து போக்குவரத்து (RTO)அலுவலர் சத்தியகுமார் பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவி உள்ளதா? முதலுதவி பெட்டி உள்ளதா? முதலுதவி பெட்டிக்குள் உள்ள பொருட்கள் காலாவதி நாள், தீ தடுப்பு கருவி ஆகியவற்றை ஆய்வு செய்தார். பள்ளி வாகனத்தின் உள் இரண்டு கேமராக்கள், வெளிப்புறம் 2 கேமராக்கள் சரியாக செயல்படுகின்றனவா? என ஆய்வு செய்தார்.
பள்ளி வாகனத்தில் உள்ள அவசர கால கதவு சரியாக உள்ளதா செயல்படுகிறதா என்பதை பரிசோதித்து பார்த்தார். இத்துடன் பள்ளி வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் சரியாக உள்ளனவா என்றும் பரிசோதித்துப் பார்த்தார். பின்னர் பேருந்து ஓட்டுனர்களிடம் பேசுகையில் பள்ளி வாகனங்களில் ரேடியேட்டரில் தண்ணீர் அளவு, வாகனத்தில் வாகனத்தின் ஆயில் அளவு, வாகனத்தில் உள்ள டயர்களின் காற்றின் அழுத்தம், ஜிபிஎஸ் கருவியின் செயல்பாடுகள் ஆகியவற்றை தினமும் பரிசோதித்து வாகனத்தை எடுத்து இயக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்குள் உள்ள தீயணைப்பின் சென்சார், கேமரா ஆகியவை சரியாக உள்ளனவா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். நகரப் பகுதியில் அதிகபட்சம் 40 கிலோமீட்டர் வேகத்திற்குள் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். நகரப்புறத்திற்கு வெளியே 60 கிலோ மீட்டர் வேகம் வரை வாகனங்களை இயக்கலாம். பள்ளி வாகனத்தில் இருந்து குழந்தைகள் இறங்கிய பிறகு அவர்கள் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் அடையும்வரை கண்காணித்து அதன் பிறகு வாகனத்தை இயக்க வேண்டும். பிறகு இந்த வாகனத்திற்குள் உள்ள அவசர வழி கேட்டை எப்படி திறக்க வேண்டும் என்பதை அனைத்து மாணவ, மாணவியருக்கும் கற்பிக்க வேண்டும். அவசர காலத்தில் வாகனத்தினில் உள்ள சுத்தியை பயன்படுத்தி வாகனத்தின் கண்ணாடியை சுத்தியால் உடைத்து எப்படி உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை விவரிக்க வேண்டும். வாகனத்தின் உள் உள்ள ரசாயனம் கலந்த நீர் அல்லது புகையை கட்டுப்படுத்துகிறதா என்பதையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்க வேண்டும்.
இத்துடன் பெற்றோர் 18 வயது நிரம்பாத தங்களது குழந்தைகளை இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தை இயக்க அனுமதித்தால் அவர்களுக்கு அபராதம் அல்லது ஆறு மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதிக வெளிச்சம் தரக்கூடிய வாகனங்களின் ஹாலாஜின் (white light) வெள்ளை லைட்டுகளை ஹைய்பீம் வசதியை எதிரில் வாகனங்கள் வராத போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை மீறி எதிரில் வாகனங்கள் வரும்போது டிம் செய்யாமல் ஹைபீம் வெள்ளை லைட்டுகளை பயன்படுத்தினால் இரு வாகனங்களின் இடைவெளியில் 50 சதவீதம் பகுதி இருட்டாகி விபத்துக்கு வலியை ஏற்படுத்தி விடும். அப்படி பயன்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 2012 ஆம் ஆண்டு அரசு வெளியிட்டுள்ள சிறப்பு விதிகளின் கீழ் பள்ளி வாகனங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இதனுடைய அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.