×

ஊரடங்கு பரிதாபங்கள்: மகளின் திருமணத்தை வீடியோ காலில் பார்த்த பெற்றோர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுதியுள்ளன. இருப்பினும் கொரோனா கட்டுக்குள் வராததால், கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கொரோனாவால் பல திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதாலும், வெளிமாவட்டங்களை சேர்ந்த மண வீட்டார், மாவட்ட எல்லைகளை தாண்ட தடை விதிக்கப்பட்டிருப்பதாலும் பல்வேறு திருமணங்கள் எளிமையாக நடைபெற்றுவருகின்றன. இவ்வாறு ஊரடங்கு மற்றும் கொரோனா தாக்குதல் புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கையில் பெரும்
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுதியுள்ளன. இருப்பினும் கொரோனா கட்டுக்குள் வராததால், கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கொரோனாவால் பல திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதாலும், வெளிமாவட்டங்களை சேர்ந்த மண வீட்டார், மாவட்ட எல்லைகளை தாண்ட தடை விதிக்கப்பட்டிருப்பதாலும் பல்வேறு திருமணங்கள் எளிமையாக நடைபெற்றுவருகின்றன. இவ்வாறு ஊரடங்கு மற்றும் கொரோனா தாக்குதல் புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் ஊரடங்கு எதிரொலியாக மும்பையில் நடந்த மகளின் திருமணத்திற்கு நேரில் செல்ல முடியாததால் மதுரை குருவித்துறை கிராமத்தை சேர்ந்த கண்ணன்-மீனா தம்பதியினர் திருமணத்தை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் பார்த்து கண்ணீர் சிந்தினர்.