“நீதி வேண்டும்”- அமைச்சர் காரை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காரை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அடையார் காந்தி நகரில் உள்ள குமாரராணி மீனா முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை மூடப்போவதாக தகவல் பரவியது அடுத்து பெற்றோர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படும் என போராடி வந்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார் அப்போது பதிலளித்த அமைச்சர் அப்படி எதுவும் நடக்காது என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று குமாரராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வருகை தந்த போது அவரது காரை நேரடியாக பெண் ஒருவர் மறித்தார். அதன் பின்பு பெற்றோர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது திடீரென காரில் இருந்து இறங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோரிடம் உங்களுடைய கோரிக்கை என்ன என கேட்டார். அப்பொழுது பெற்றோர்கள் இந்த பள்ளியை மூடப் போவதாக சொல்கிறார்கள் எங்களுடைய பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று முறையிட்டனர் அப்படி ஒரு எந்த திட்டமும் இல்லை நான் பள்ளி முதல்வர் இடம் பேசுகிறேன் என தெரிவித்தார். இதனை அடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.