பெற்றோர்கள் கவனத்திற்கு: உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெயர் இல்லையா? உடனே இதைச் செய்யுங்கள்!
பெற்றோர்களுக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து ஒரு முக்கிய அறிவப்பு வெளியாகியுள்ளது. இதுவரை உங்கள் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் பெறவில்லை என்றால் அதை உடனே பெற்றுக் கொள்ளவும்.
பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி?
பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்பு சான்றிதழ் ஆகும்.
குழந்தை பள்ளியில் சேர வாக்களார் அடையாள அட்டை பெற ஓட்டுநர் உரிமம் பெற பாஸ்போர்ட் விசா உரிமம் பெற அயல்நாட்டில் குடியுரிமை பெற பிறப்பு சான்றிதழ் இன்றியமையாத ஆவணமாக உள்ளது.
ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமின்றி பெயர் பதிவு செய்யலாம் 12 மாதங்களுக்குப் பின் பதினைந்து வருடங்களுக்குள் ரூ.200/- தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம் 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரினை பதிவு செய்ய இயலாது.
இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி 01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தையின் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வட்டாட்சியர் அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம் ) விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிட வேண்டும்.