×

சிறுபான்மையினர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படுமா?

 

தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22ஆம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் உயர்கல்வி படிப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

பள்ளிப் படிப்பு வரையிலான கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 15ஆம் தேதி வரையிலும், உயர்கல்விக்கான உதவித் தொகைக்கு நவம்பர் 30ஆம் தேதி வரையிலும் www.scholarships.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என சொல்லப்பட்டிருந்தது. விண்ணப்ப விபரங்களை முதற்கட்டமாக அந்தந்த பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும். அதற்கு நேற்று தான் கடைசி நாள். ஆனால் வடகிழக்குப் பருவமழை காரணமாக நவம்பர் 2ஆம் தேதி முதல், பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் சரியாக இயங்கவில்லை. 

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பள்ளிகளே திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சிறுபான்மையினர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப அவகாசத்தை, இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.