×

பொருளாதாரம் பாதிப்பு- அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள்!

ஈரோடு, ஆக. 22- கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது கடந்த ஆறு மாத காலமாக வைரஸ் பாடாய்படுத்தி வருகிறது பலரது வாழ்க்கை முறை பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இன்னும் இதில் இருந்து மீளாமல் நிறைய பேர் உள்ளனர். வைரசால் கடந்த மார்ச் மாதம் முதல் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன ஜூன் மாதம் முதல் படிப்படியாக நிறுவனங்கள் திறக்க பட்டாலும் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை அப்படியே
 

ஈரோடு, ஆக. 22-

கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது கடந்த ஆறு மாத காலமாக வைரஸ் பாடாய்படுத்தி வருகிறது பலரது வாழ்க்கை முறை பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இன்னும் இதில் இருந்து மீளாமல் நிறைய பேர் உள்ளனர். வைரசால் கடந்த மார்ச் மாதம் முதல் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன ஜூன் மாதம் முதல் படிப்படியாக நிறுவனங்கள் திறக்க பட்டாலும் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை அப்படியே வேலை இருந்தாலும் கடந்த காலத்தில் கிடைத்த ஊதியம் கிடைக்கவில்லை இது போக இன்னும் பொது போக்குவரத்து தொடங்குவதால் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு வேலை சென்ற பெண்கள் 30 சதவீதம் பேர் இன்னும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர் ‘இதனால் குடும்பத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது .

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தங்களது பிள்ளைகளை கடன் வாங்கியாவது பெற்றோர்கள் தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்தனர் தினக்கூலி நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்த்து வந்தனர் .இந்த பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு படிப்பதற்கு ஆண்டுக்கு 20,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் கூலி தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடந்து வருகிறது இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

தற்போது அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிக்கு நிகராக அடிப்படை கட்டமைப்புகள் உடன் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது . இது குறித்து பெற்றோர்கள் கூறும் போது தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது வைரஸ் தாக்கம் காரணமாக எங்களது பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது முன்பைவிட சிக்கனமாக செலவு செய்து வருகிறோம் போன வருடம் வரை எங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து இதற்காக ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கடன் வாங்கி செலவு செய்தோம் ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு நாளை கழிப்பதே எங்களுக்கு பெரிய சவாலாக உள்ளது இதில் பிள்ளைகள் கல்விக்கு ஆயிரக்கணக்கில் செலவழித்து எங்களது பொருளாதார நிலைமை ஒத்துக்கொள்ளவில்லை இதனால் எங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருகிறோம் தற்போது அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி விளையாட்டு பொது அறிவு ஸ்மார்ட் கிளாஸ் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன என்றனர்.

இதுகுறித்து ஈரோடு எஸ் கே சி சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுமதி கூறும்போது, எங்கள் பள்ளிகளில் தனியார் பள்ளிகள் போன்று அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளன ஸ்மார்ட் கிளாஸ் ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்று மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் கல்வியையும் கற்றுக் கொடுக்கிறோம் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடந்து வருகிறது சில பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளி சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து தங்களது குழந்தைகளை இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் சேர்த்து உள்ளனர் நடுத்தர குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ள சூழ்நிலையில் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தொடங்கியுள்ளனர் கொரோ னாவால் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது இந்த மாற்றம் அரசு பள்ளிகளுக்கு நல்ல பலனை அளித்துள்ளது என்றார். ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர்