பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை நடுரோட்டில் விட்டு சென்ற பெற்றோர்
Mar 17, 2026, 18:18 IST
சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் பிறந்து ஒரு சில மணி நேரமே ஆன நிலையில் ஆண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருவலஞ்சுழி என்ற இடத்தில் இன்று மதியம் வெள்ளை விநாயகர் ஆலயம் எதிரில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தையை காரில் வந்தவர்கள் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. கேட்பாறற்று கிடந்த குழந்தையை பார்த்த அக்கம்பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த குழந்தையை கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ஆண் குழந்தை நலமுடன் உள்ளது. குழந்தையை கைவிட்டுச் சென்ற நபர்கள் குறித்து சுவாமிமலை காவல்நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.