பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்காமல் கட்டணம் வசூலிக்க தொழில்நுட்பம்
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக முழு தானியங்கி, தடையற்ற MLFF சுங்க வசூல் முறை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்தது.
தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பரனூர் சுங்கச்சாவடியில் பேரியர்கள் (Barriers) இல்லாத சுங்கக் கட்டண முறை அமலுக்கு வருகிறது. வாகனங்கள் நிறுத்தப்படாமல் செல்ல ANPR (தானியங்கி எண் பலகை அங்கீகாரம்) மற்றும் FASTag தொழில்நுட்பங்கள் மூலம் NHAI சோதனைகளைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் வாகனங்கள் நிற்காமல் செல்லலாம், கட்டணம் தானாகவே கழிக்கப்படும். தமிழகத்தில் முதன் முறையாக தானியங்கி கேமரா மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. MLFF முறையில் சுங்கக் கட்டண மையங்கள் இல்லாமல், வாகனங்கள் தொடர்ந்து செல்லும் போதே கட்டணம் வசூலிக்கப்படும். செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில், தடையற்ற தானியங்கி சுங்கக் கட்டண வசதியான "Multi-Lane Free Flow" முறை நள்ளிரவு முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பரனூர் தவிர, நெமிலி மற்றும் செந்நசமுத்திரம் சுங்கச்சாவடிகளிலும் இச்சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பயண நேரம் வெகுவாகக் குறையும்.