×

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு!

 

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இன்று சந்தித்து பேசினார். 

இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், திரைக்கலைஞரும் - சமூக செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ்  சார், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்த போது நாம் உடன் இருந்தோம்.  இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் அரசியலமைப்பை  - மதச்சார்பின்மையை காப்பதற்கு ஜனநாயக சக்திகள் ஓரணியில் நிற்க வேண்டும் என்பது உட்பட பல ஆழமான கருத்துக்களை பிரகாஷ்ராஜ் சார் பகிர்ந்து கொண்டார்.  அவருடைய திரையுலகப்பணி மட்டுமன்றி, சமூகப்பணியும் சிறக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.