பேப்பர் செம டஃப்..!! கட்-ஆஃப் குறையம் என எதிர்பார்ப்பு..!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு சற்று கடினமாகவே இருந்ததாக நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, தமிழ் மற்றும் பொது அறிவு கேள்விகள் நீளமாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர். இத்தேர்வில், "விடியல் பயணம் திட்டம்" உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பான கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
குரூப் 4 தேர்வின் முடிவுகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். மொத்தம் 13,89,738 பேர் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 2,41,719 பேர் தேர்வை எழுதவில்லை. ஆக, 11,48,019 பேர் (82.61 சதவீதம்) தேர்வை ஆர்வமுடன் எழுதியுள்ளனர். இதன் மூலம், காலியாக உள்ள 3,935 இடங்களுக்கு 11,48,019 பேர் போட்டியிடுகிறார்கள். அதாவது ஒரு இடத்துக்கு 292 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த முறை தேர்வு கடினமாக இருந்ததால் கட்-ஆஃப் குறைய வாய்ப்புள்ளது என பலரும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.