×


அதிமுகவுக்கு பொதுமக்கள் யாருமே வாக்களிக்கவில்லை- பண்ருட்டி ராமச்சந்திரன்

 

எடப்பாடி என்ற தனிநபரை தூக்கி எறிந்தால் தான் அதிமுக வளர முடியும் என அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 8 ஆயிரத்து 474 வாக்குகளும் பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்றிருந்தார். த.மா.கா வேட்பாளர் யுவராஜைவிட தற்போது 15 ஆயிரம் வாக்குகள் குறைவாக அதிமுக வேட்பாளர் தென்னரசு பெற்றுள்ளார். வெற்றி வித்தியாசத்தைவிட அதிமுக வேட்பாளர் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகள் குறைவாக உள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள மேற்கு மண்டலத்திலேயே தென்னரசு பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்தும் மொத்தம் பதிவான வாக்குகளில் பாதியை கூட பழனிசாமி தரப்பால் பெற முடியவில்லை. 

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், “அதிமுகவின் தற்போதைய நிலை மிகுந்த வேதனையை அளிக்கிறது. எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைத்தது ஆறுதலாக இருக்கிறது. எடப்பாடி என்ற தனிநபரை தூக்கி எறிந்தால் தான் அதிமுக வளர முடியும். அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் மட்டுமே வாக்களித்துள்ளனர். பொதுமக்கள் யாருமே அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை. எடப்பாடி என்ற தனிநபரை தூக்கி எறிந்தால் தான் அதிமுக வளர முடியும் ” என்றார்.