×

"தவெகவினரால் தொந்தரவு! ரொம்ப கஷ்டப்படறோம்.." - பனையூர் மக்கள் ஆத்திரம்

 

சென்னை பனையூரில் விருப்ப மனு விநியோகம் தொடங்கிய நிலையில், அங்கு குவிந்த தவெக நிர்வாகிகள் தங்கள் கார்களை சாலைகளில் நிறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

தவெக சார்பில் 234 தொகுதிகளுக்குமான விருப்பமனு விண்ணப்பங்களின் விநியோகம் இன்று பனையூரில் தொடங்கியது. முதல் மனு கட்சித் தலைவர் விஜய்யின் பெயரிலும் இரண்டாவது மனு பொதுச்செயலாளர் ஆனந்தின் பெயரிலும் பெறப்பட்டது. விருப்பமனுவை ரூ.100 செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதனை பூர்த்தி செய்து சமர்பிக்கையில் பொது தொகுதிக்கு 10000 ரூபாயும் தனித் தொகுதிக்கு 5000 ரூபாயும் டிடியாக எடுத்துக் கொடுக்க வேண்டும் என தவெக தலைமை அறிவித்துள்ளது. தவெகவில் ஒரே நாளில் ஒன்றரை மணி நேரத்தில் 10,000 விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில் சென்னை பனையூரில் விருப்ப மனு விநியோகம் தொடங்கிய நிலையில், அங்கு குவிந்த தவெக நிர்வாகிகள் தங்கள் கார்களை சாலைகளில் நிறுத்தியதாக பனையூர் மக்கள்
புகார் கூறியுள்ளனர். சுமார் 13 தெருக்களில் ஆங்காங்கே கார்கள் நிறுத்தப்பட்டதால் வீடுகளை விட்டு வெளியேற சிரமப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எங்கள் தெருக்களில் இயல்பாக இருக்க முடியவில்லை. வாகனங்களை வீட்டின் முன்பு நிறுத்துகிறார்கள். தடுப்புகள் அமைக்கின்றனர். ரொம்பவே சிரமமாக இருக்கிறது என தவெக அலுவலகம் அருகே வசிக்கும் குடியிருப்புவாசிகள் புகார் கூறுகின்றனர்.