×

பாஜகவுடன் மிகப் பெரிய டீல் போட்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம்”- பனையூர் பாபு

 

பாஜகவுக்கு கைமாறு செய்யும் விதமாக, விபி ஜி ராம் ஜி திட்டத்தை அமல்படுத்துவது, அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பாஜக சொல்லும் நபரை தேர்வு செய்வது, சட்டமன்றத்தில் ஆளுநரை குளிர்விப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என தவெகவை முன்னாள் எம்.எல்.ஏ.பனையூர் பாபு விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக பனையூர் பாபு தனது எக்ஸ் தளத்தில், “2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக 47 இடங்களை வென்றது. அதிமுகவின் வெற்றிக்காக பிரதமர் மோடி தொடங்கி தமிழ்நாட்டு பாஜகவினர் என அனைவருமே பிரசாரம் செய்தனர். தற்போது ‘பாஜகவுக்கு அடிபணிந்து கிடக்கும் அதிமுகவை, இவ்வளவு தைரியமாக தவெக உடைக்கிறது என்றால், பாஜக-வின் ஒப்புதல் இல்லாமல் அதைச் செய்வார்களா? குதிரைபேரத்தில் தவெக ஈடுபடும் போது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார் ஆளுநர். இன்னும் பல அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெகவுக்கு தாவுவதற்கு ஏதுவாக இடைத்தேர்தலை தள்ளிவைக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இவற்றையெல்லாம் பார்த்தால் பாஜகவுடன் மிகப் பெரிய டீல் போட்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. 

பாஜகவுக்கு கைமாறு செய்யும் விதமாக, விபி ஜி ராம் ஜி திட்டத்தை அமல்படுத்துவது, அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பாஜக சொல்லும் நபரை தேர்வு செய்வது, சட்டமன்றத்தில் ஆளுநரை குளிர்விப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். சுயலாபத்துக்காக மாநில உரிமைகளை அடகு வைக்கும் தவெகவின் முகத்திரை கிழியத் தொடங்கியிருக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.