☰
×

அதிக வருவாய் ஈட்டும் கோயில்களில் பழனி முதலிடம்! டாப் 10 கோயில்கள் விவரம்

 

தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் எப்போதும் போல இந்த ஆண்டும் பழனி தண்டாயுதபாணி கோயில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக அருணாச்சலேஸ்வரர் கோயிலும்,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் பிடித்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அதிக வருமானம் ஈட்டும் முதல், 10 முன்னணி கோவில்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண் டாயுதபாணி சுவாமி கோவில், 233.50 கோடி ரூபாய் வருவாயுடன், முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மாநிலத்தில் உள்ள முதல், 10 கோவில்களின் ஒட்டு மொத்த ஆண்டு வருமானம், 941.99 கோடி ரூபாயாகும். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, தினமும் வந்து செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக செய்யப்படும், அடிப்படை உள்கட்டமைப்பு மேம் பாடுகள், அன்னதான திட்டங்கள் மற்றும் துாய்மைப் பணிகள் போன்றவற்றுக்கு, இந்த வருவாய் முழுமையாக பயன்படுத்தப்படும்' என்றனர்.