×

“பழனி சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை” – ஆட்சியர்

பழனி முருகன் கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். கந்தசஷ்டி திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் இன்று நடந்தது. இதில் மாவட்ட கோயில் செயல் அலுவலர் கிராந்தி குமார்பாடி, பழனிகோட்டாட்சியர் அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் விஜயலெட்சுமி, இந்து சமய அறநிலையத்துறையின் நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பழனி
 

பழனி முருகன் கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். கந்தசஷ்டி திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் இன்று நடந்தது. இதில் மாவட்ட கோயில் செயல் அலுவலர் கிராந்தி குமார்பாடி, பழனி
கோட்டாட்சியர் அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் விஜயலெட்சுமி, இந்து சமய அறநிலையத்துறையின் நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பழனி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் 6ஆம் நாளான வரும் 20ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சியும், 7ஆம் நாளான 21ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க மண்டகப்படிதாரர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்த ஆட்சியர் விஜயலட்சுமி, இந்த நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் யூடியுப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த 2 நாட்களை தவிர மற்ற நாட்களில் தினசரி காலை 8 மணி
முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்த ஆட்சியர், இதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மேலும், முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்யவும் வேண்டுமென அவர் தெரிவித்தார்.