×

பழனி கோயில் தங்கும் விடுதி அறைகளின் கட்டணம் நாளை முதல் உயர்வு

 

பழனி கோயில் தங்கும் விடுதி அறைகளின் கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை புரிந்து,  சாமி தரிசனம் செய்வது வழக்கம்.  தரிசனத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலை  கோயிலுக்கு செல்ல படிப்பாதை,  யானை பாதை பிரதான வழியாக உள்ளது. அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது .விரைவாகவும்,  இயற்கை அழகை ரசித்த படியும் ரோப் கார்  மற்றும் மின் இழுவை ரயிலில் செல்லலாம்.

பழனி கோயில் தங்கும் விடுதி அறைகளின் கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் தங்கும் விடுதிகள் நாளை முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படவுள்ளது. இதனையடுத்து தங்கும் விடுதியின் வாடகை ரூ.300 முதல் ரூ.1500 வரை உயர்த்தப்படுவதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.