×

255-வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் தேர்தல் மன்னன் பத்மராஜன்..!

 

மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (65). இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார். இவர் 1988-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.


1988 முதல் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்கு மேலாக, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் உள்பட கூட்டுறவு அமைப்புக்கான தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.

அனைத்து தேர்தல்களிலும் குறைந்த வாக்குகளைப் பெற்று, தேர்தலில் அதிக முறை தோல்வியைத் தழுவிய வேட்பாளர் என்ற சாதனையைப் படைத்து லிம்கா உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

தொடர்ந்து தோல்வியடைந்தாலும், இறுதி மூச்சுவரையில் தேர்தலில் போட்டியிடுவேன் என பத்மராஜன் கூறுகிறார். தேர்தலில் வெற்றியை எதிர்பார்ப்பதில்லை என்றும், தேர்தலில் பங்கேற்பதே வெற்றி என்றும் அவர் கூறுகிறார்.

இதுவரையில் தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்காக மட்டும் சுமார் ரூ. 1 கோடிக்கும் மேலாக செலவழித்ததாகக் கூறும் பத்மராஜன், அதிகபட்ச வாக்குகளாக 2011 தேர்தலின்போது மேட்டூர் தொகுதியில் 6,273 வாக்குகள் பெற்றுள்ளார்.
தற்போது நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மேட்டூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, 390 வாக்குகளை பத்மராஜன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பாக தேர்தல் மன்னன் பத்ம ராஜன் கூறுகையில், தற்போது 225- ஆவது முறையாக டெல்லி ராஜ்யசபா எம்பி பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.