மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது, மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷன் & பத்ம ஸ்ரீ விருதுகளை, 23 ஜூன் 2026 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கவுள்ளார்.
இந்நிலையில் சினிமா மீதான அர்ப்பணிப்பால் கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நடிகர் மம்மூட்டிக்கு, 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இந்தியத் திரையுலகின் மாபெரும் ஆளுமையாகவும், கலாச்சார அடையாளமாகவும் திகழ்கிறார். சிறந்த நடிப்பால் மக்களின் இதயங்களை வென்ற தெலுங்கு திரையுலகின் மாபெரும் கலைஞர், நடிகர் கட்டே பாபு ராஜேந்திர பிரசாத் 2026-ஆம் ஆண்டின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது இயல்பான நகைச்சுவையால் மக்களை கவர்ந்த நடிகர் சதீஷ் ஷாவுக்கும் 2026-ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. "மேடி" என்று அழைக்கப்படும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.