×

விளம்பரங்களில் கூட ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே விரிசல் – ப. சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் பூத் முகவர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “வேளாண் திருத்த சட்டத்தில் வரட்டு கெளரத்தை கையாள்கிறது பாஜக அரசு. பாஜக ஆட்சியினால் செம்மொழியான தமிழுக்கு ஆபத்து வந்துள்ளது. முதல்வர் துணை, முதல்வருக்குள் கருத்து வேறுபாட்டை மறைக்கவே, புதிய திட்டங்கள் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படுகிறது. தேசியமும் திராவிடமும் வளர்த்த மண் தமிழகம், இதில் பாஜக என்ற நச்சு செடி வளராது, மலராது. வெற்றியை துரோகிகள்
 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் பூத் முகவர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “வேளாண் திருத்த சட்டத்தில் வரட்டு கெளரத்தை கையாள்கிறது பாஜக அரசு. பாஜக ஆட்சியினால் செம்மொழியான தமிழுக்கு ஆபத்து வந்துள்ளது. முதல்வர் துணை, முதல்வருக்குள் கருத்து வேறுபாட்டை மறைக்கவே, புதிய திட்டங்கள் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படுகிறது. தேசியமும் திராவிடமும் வளர்த்த மண் தமிழகம், இதில் பாஜக என்ற நச்சு செடி வளராது, மலராது. வெற்றியை துரோகிகள் மூலம் தேடிக் கொண்டவர்கள் பாஜகவினர்.

பாஜகவில் ஒரு வகுப்பினர் மட்டுமே உள்ளனர் அனைத்து வகுப்பினரும் இருப்பது காங்கிரஸில் தான். கொரோனாவுக்கு மருந்துக்கு கண்டுபிடித்தது பாஜக அல்ல, விஞ்ஞானிகள். அதிமுக ஒரு விளம்பர அரசாக உள்ளது. ஒரு விளம்பரத்தில் முதல்வர் இருக்கிறார். மற்றொன்றில் துணை முதல்வர் இருக்கிறார். விளம்பரத்திலேயே அவர்களுக்குள் குழப்பம் உள்ளது.

பாஜகவின் இந்தி திணிப்பு நடவடிக்கையால் தாய்மொழி மெல்ல மெல்ல அழிந்து விடும். காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டது கிடையாது. போவதும் இல்லை. ஒரே தேசம் ஒரே மொழி ஒரே கட்சி இதுதான் பாஜகவின் நோக்கம். அதிமுகவை குறைத்து மதிப்பிடவில்லை. தற்போது அதிகாரத்துடன் பண பலமும் சேர்ந்துள்ளது. மகளிர் குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட கடனில் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டும்” எனக் கூறினார்.