×

மக்களவை தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி செல்லும் : சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 3,354 வாக்கு வித்தியாசத்தில் ப.சிதம்பர வெற்றி பெற்றார். இதை எதிர்த்து, ராஜகண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணை அனைத்தும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே நிறைவடைந்த நிலையில், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல்
 

2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 3,354 வாக்கு வித்தியாசத்தில் ப.சிதம்பர வெற்றி பெற்றார். இதை எதிர்த்து, ராஜகண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

வழக்கின் விசாரணை அனைத்தும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே நிறைவடைந்த நிலையில், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில், இன்று ப.சிதம்பரம் வெற்றி தொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

2009ல் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ராஜகண்ணப்பனின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.