×

ரூ.1,000 நோட்டு மீண்டும் அறிமுகமாகலாம்- ப.சிதம்பரம்

 

நாட்டில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே ரூ.2,000 நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், பிழையை சமாளிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஆர்பிஐ செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டு பரிமாற்றத்தற்கு உகந்தது அல்ல என கடந்த 2016 ஆம் ஆண்டே கூறியிருந்தோம். 2016 ஆம் ஆண்டு நவம்பரில் செய்த மிகப்பெரிய பிழையை சரிசெய்ய ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. எதிர்பார்த்தது போலவே ஒன்றிய அரசு ரூ.2,000 நோட்டை திரும்பப் பெற்றுள்ளது. ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்தது முட்டாள்தனமான நடவடிக்கை என்பது உறுதியானது. ரூ.1,000 நோட்டை ரிசர்வ் வங்கி மீண்டும் அறிமுகப்படுத்தினாலும் ஆச்சர்யப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை. 2016ல் நான் கூறியது சரி என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. 


2000 ரூபாய் நோட்டு ஒருபோதும் 'சுத்தமான' நோட்டாக இருக்கவில்லை. இது பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படவில்லை. ஒரு சில பணக்காரர்கள் தங்கள் கறுப்புப் பணத்தை, தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.