×

எதிர்க்கட்சிகளை வேரோடு அழிப்பதுதான் பாஜகவின் நோக்கம்- ப. சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “தற்போது தேர்தலில் முகத்தை பார்த்து யாரும் வாக்கு செலுத்திவிட மாட்டார்கள், தற்போது உள்ள தேர்தல் அதிகாரபலத்தையும் பணபலத்தையும் நம்பியுள்ளது, இதையெல்லாம் கடந்து திமுக தேர்தல் அறிக்கை, ஆள் பலம், கருத்து பலத்தால் நாம் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவோம். தமிழகத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர்
 

புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “தற்போது தேர்தலில் முகத்தை பார்த்து யாரும் வாக்கு செலுத்திவிட மாட்டார்கள், தற்போது உள்ள தேர்தல் அதிகாரபலத்தையும் பணபலத்தையும் நம்பியுள்ளது, இதையெல்லாம் கடந்து திமுக தேர்தல் அறிக்கை, ஆள் பலம், கருத்து பலத்தால் நாம் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

தமிழகத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் ஒரே மேடையில் பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்தவுடன் திமுக தலையிலான கூட்டணிக்கு வெற்றி உறுதி‌ ஆகிவிட்டது. தற்போது பாஜக -அதிமுக கூட்டணி உடைந்து விடும் என்ற நிலையில் உள்ளது.

தமிழகத்தில் பாஜக முளைக்க முடியாது, பாஜக நச்சு செடி அதை விதைப்பதற்கோ முளைப்பதற்கோ அனுமதி மக்கள் தரமாட்டார்கள், நாட்டில் அனைவரும் அச்சத்தோடு உள்ளனர், தமிழகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மத்திய பாஜக அரசால் மிகவும் அச்சத்தோடு உள்ளார்,

மத்தியில் தற்போது உள்ள ஆட்சி அரசியல் கட்சி அல்ல, அரசு இயந்திரம் அல்ல, வாஜ்பாய், அத்வாணி உள்ளிட்டோர் இல்லாவிட்டாலும் அவர்கள்தான் அரசியல் வாதிகள் , ஜனநாயக வாதிகள், ஆனால் தற்போது உள்ளவர்கள் அரசியல்வாதிகளோ, ஜனநாயகவாதிகளோ அல்ல, இவர்கள் முரட்டுதனமான இயந்திரத்தை நடத்திவருகிறார்கள், இவர்களின் நோக்கம் எதிர்கட்சிகளே இல்லாமல் ஆக்குவது, முக்கியமாக காங்கிரஸ் கட்சியை வேறோடு அழிப்பது” எனக் கூறினார்.