×

தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 டன்னாக அதிகரிப்பு – மத்திய அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் நோயாளிகளுக்கு போதாததால், கூடுதல் ஆக்சிஜன் விநியோகம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது தமிழக அரசு. அதன் படி, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலமாக ஆக்சிஜன் விநியோகம் செய்தது. தற்போது தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லையென முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 டன்னாக
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் நோயாளிகளுக்கு போதாததால், கூடுதல் ஆக்சிஜன் விநியோகம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது தமிழக அரசு. அதன் படி, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலமாக ஆக்சிஜன் விநியோகம் செய்தது. தற்போது தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லையென முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் பணிகளில் தமிழக அரசுக்கு உதவியாக செயல்படுகிறோம் என்றும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கொரோனாவை தடுப்பதில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக சென்னை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் முகங்களை உறவினர்கள் பார்க்கும் வகையில் பொதிந்து வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.