ஓவர் ஸ்பீடு.. கார் சாகசம்... 57,500 ரூபாய் அபராதம் விதித்த போலீசார்..!
Oct 14, 2025, 05:25 IST
நொய்டாவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டிய நபருக்கு கிரேட்டர் நொய்டா போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில், போக்குவரத்து மிகுந்த சாலையில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு போலீசார் 57 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.பொறுப்புணர்வின்றி ஆபாத்தான முறையில் காரை இயக்கியதாக, போலீசார் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.
சமூகவலைதளத்தில் வைரலான அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த காரின் பதிவெண் அடிப்படையில் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளனர்.