சலசலப்புக்குள்ளான 100க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து- தமிழக அரசு அதிரடி
May 22, 2026, 18:42 IST
நிர்வாக காரணங்களுக்காக குறுகிய கால 100க்கும் மேற்பட்ட டெண்டர்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மே 13 முதல் மே 22 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை நிர்வாக காரணங்களுக்காக டெண்டர்களை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு. ஊரக வளர்ச்சித்துறை,போக்குவரத்து துறை, பொதுப்பணி, மின்சாரத்துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டன. குறுகிய கால டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறுகிய கால டெண்டர் வெளியிட்ட சில அதிகாரிகள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.