நேபாளத்தில் ஈஷா குழுவும் சிக்கியுள்ளது- ஜக்கி வாசுதேவ்
நேபாள வெள்ளத்தில் ஈஷா யோகா மைய குழுவும் சிக்கியுள்ளதாக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
நேபாள பெரு வெள்ளத்தில் கைலாஷ் புனித யாத்திரை மேற்கொண்ட எங்கள் குழுவும் சிக்கியுள்ளதாக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “நேபாள பெரு வெள்ளத்தில் கைலாஷ் புனித யாத்திரை மேற்கொண்ட எங்கள் குழுவும் சிக்கியுள்ளது. எங்கள் குழுவை சேர்ந்த 77 பேர் திரும்பி வரும் வழியில், வெள்ளம் ஏற்பட்டபோது குடிவரவு அலுவலகத்தில் இருந்தனர். மேலும் அந்த கட்டிடமும் நகரத்தின் பெரும் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிகிறது, ஆகவே குடிவரவு அலுவலகத்தில் இருந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. எங்களின் 21 குழுக்களில், 495 பேர் ஏற்கனவே பாதுகாப்பாக திரும்பிவிட்டனர்” என்றார்.