எங்கள் டார்கெட் டைகர் ஷெராப் அல்ல...லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் திடுக்கிடும் வாக்குமூலம்..!!
மும்பையில் உள்ள ஜூஹு பகுதியில் வசித்து வரும் பிரபல ஹிந்தி நடிகர் டைகர் ஷெராப் மீது, கடந்த 18ம் தேதி மூன்று பேர் அடங்கிய கும்பல் இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். டைகர் ஷெராபின் ஓட்டுனர் காயமடைந்தார். இந்த தாக்குதலுக்கு குஜராத் சிறையில் உள்ள பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.
தாக்குதல் நடத்திய பீஹாரின் பெகுசாராயை சேர்ந்த ரித்திக் என்ற ரோஷன், ஹரியானாவின் சோனிபட்டைச் சேர்ந்த ரேஹான் உட்பட மூன்று பேர் ராஜஸ்தானின் கோட்டாவில் கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 10 பேர் கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகின. அது பற்றி போலீஸ் கூறியதாவது; துப்பாக்கிச்சூடு நடத்துவதற்காக ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஆட்களை நியமித்துள்ளது. ஹாரில் உள்ள அமீர் கான் வீட்டையும், மும்பையில் உள்ள ரன்பீர் கபூர் வீட்டையும் இந்த கும்பல் கண்காணித்து வந்துள்ளது. டைகர் ஷெராப் அவர்களின் உண்மையான இலக்கு அல்ல. போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்ததால் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த பூல் சிங், 18, ரெஹான் அன்சாரி,18, இந்த சதித்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மும்பையின் தாதர் பகுதிகளில் ஒரு மாதமாக பல்வேறு விடுதிகளில் தங்கியிருந்தனர். டைகர் ஷெராப் மீது தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய நாள், அவர்களுக்கு துப்பாக்கி கிடைத்துள்ளது. வனப்பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டு ஒத்திகை பார்த்துள்ளனர். அப்போது, ஒரு துப்பாக்கி பழுதடைந்துள்ளது. இவ்வாறு கூறினர்.