உங்களுக்கு எங்கள் சல்யூட்... இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவிப்பு..!!
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு, 'பிளைதுபாய்' விமானம் கடந்த 30ம் தேதி சென்றது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த விமானி ஸ்மிட் மச்சார், விமானத்தை இயக்கினார். 34,000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, ஸ்மிட் மச்சாரை ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்ஹமாமி, கத்தியால் குத்தினார்.ஆனாலும் துணிச்சலுடன் செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய ஸ்மிட் மச்சாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
காயமடைந்த இந்திய விமானி ஸ்மிட், ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இக்கட்டான இச்சூழலில் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் அனைவரது உயிரையும் காப்பாற்றிய விமானியின் தியாகம் மற்றும் சிறந்த ஆளுமையைப் பாராட்டும் விதமாக ரூ. 1 கோடி நிதியுதவி ஸ்மிட் மச்சார் மற்றும் அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் மேன்கைண்ட் பார்மா தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ''எங்கள் நன்றியைத் தெரிவிக்கும் ஒரு எளிய முயற்சியாக, ஸ்மிட் மச்சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ரூ. 1 கோடி வழங்குகிறது. நீங்கள் இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். உங்களுக்கு எங்கள் சல்யூட்,' என்று தெரிவித்துள்ளது.