எங்கள் குடிநீர் பாதுகாப்பானது- பிஸ்லெரி நிறுவனம் விளக்கம்
பிஸ்லெரி குடிநீர் பாதுகாப்பானது என்றும், FSSAI உடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பிஸ்லெரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பிஸ்லெரி நிறுவனத்திற்கு ஓர் அறிவிப்பு அனுப்பியுள்ளது என்ற சமீபத்திய ஊடகச் செய்திகளை நாங்கள் அறிவோம். இந்த விவகாரம், எங்களுக்கு கீழ் உள்ள 143 ஆலைகளில் ஒன்றான கோவா உற்பத்தி ஆலையில், செப்டம்பர் 2025-ல் தயாரிக்கப்பட்டது தொடர்பானது. இது சுமார் 14 மாதங்களுக்கு முன்பு நடந்த சோதனை. 30 செப்டம்பர் 2025 அன்று, கோவா ஆலையில் FSSAI 6 மாதிரிகள் சேகரித்தது. அதில் 6ல் 5 மாதிரிகள் தரநிலைக்குள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரே ஒரு மாதிரியில் புரோமேட் அளவு அதிகரித்து இருந்தது. ஒரு லிட்டருக்கு 10 மைக்ரோகிராம் என்ற பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்கு எதிராக, புரோமேட்டின் அளவு ஒரு லிட்டருக்கு 12 மைக்ரோகிராம் எனப் பதிவானது.
22 நவம்பர் 2025 தேதில் நடந்த மறுபரிசோதனையில் புரோமேட் அளவு அனுமதி வரம்பிற்குள் உள்ளது. தரமான குடிநீரை உறுதி செய்ய 90-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. குடிநீர் பாதுகாப்பே பிஸ்லெரியின் முக்கிய நோக்கம். 10 கக்கும் மேற்பட்ட தர பரிசோதனைகள், 10 கட்ட சுத்திகரிப்பு நிலையை பின்பற்றுகிறோம். பிஸ்லெரி குடிநீர் எப்போது குடிப்பதற்கு பாதுகாப்பானது. பிஸ்லெரி குடிநீரில் அதிக ரசாயனம் இருந்ததாக எழுந்த புகார் தொடர்பாக FSSAI-யின் சட்ட நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.