எங்க முதல்வருக்கு புகழ்ச்சி பிடிக்காது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயை த.வெ.க எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி வி. நாராயணன் புகழ்ந்து பேசினார். தொடர்ந்து, பாரிக்கரையிலே மண்டபம் ஒன்றை வளர்ந்து நாரியர்கள் கூடி நாடெங்கும் வாசமிட்டு ஒரு குடைக்குள் ஆள்வாய் உன் காலம் என் மகனே என்று பாடல் பாடி புகழ்ந்து கொண்டிருந்த போது குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,
"நம்முடைய முதலமைச்சர் மற்ற முதலமைச்சர் போல் இல்லை. நம்முடைய முதலமைச்சருக்கு புகழாரம் பிடிக்காது. தங்களுடைய தொகுதி சார்ந்த தேவைகளை குறித்து மட்டும் பேசுங்கள். சட்டப்பேரவையில் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் தொகுதி சார்ந்த தேவைகளை குறித்து மட்டும் பேச வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் நேரு, "முதல்வருக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மற்ற முதல்வர்களை போன்று எங்கள் முதல்வர் இல்லை என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் புகழ்ச்சி பிடிக்காது. தன்னை சட்டமன்ற உறுப்பினர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என பேரவையிலேயே எழுந்து நின்று சொன்னவர் தான் எங்கள் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின்" என்றார்.
எங்க முதல்வருக்கு புகழ்ச்சி பிடிக்காது! 🔥
— Arunthamizh | அருந்தமிழ் (@arunthamizhnews) August 19, 2026
ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக அமைச்சர் கே.என். நேரு பதிலடி | TVK | DMK
.
.
.#TVK #DMK #AadhavArjuna #KNNehru #CMVijay pic.twitter.com/6Io4EqHmW5