☰
×

OTT ரிலீஸ்.. இந்த வீக் என்னென்ன படம் பார்க்கலாம்..?

 

நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. இப்படம், பெரும் எதிர்பார்ப்புடன் இன்று 2ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. இப்படம், பெரும் எதிர்பார்ப்புடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் உருவான இந்தத் திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப் படைத்தது

 

கன்னடத்தில் வெளிவந்த காமெடி, க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Mother Promise'. இப்படம் இன்று 2ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.

ஹுமா குரேஷி, மிருணாள் தாகூர் ஆகியோர் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த மிஸ்ட்ரி, ரொமான்ஸ், திரில்லர் திரைப்படம் 'Pooja Meri Jaan'. இப்படம் இன்று 2ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.

திரில்லர் ட்ராமா ஜானரில் உருவாகியுள்ள ஹாலிவுட் வெப் தொடர் 'War'. இத்தொடரின் முதல் சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.

நடிகர் கார்த்தி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள சர்தார் - 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ள லவ் இணையத் தொடர், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.காதலில் சொதப்புவது எப்படி, மாரி படங்களின் இயக்குநர் பாலாஜி மோகன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இத்தொடரை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்.

 

அறிமுக இயக்குநர் வேணு கோபால் ரெட்டி இயக்கியுள்ள ரோமாஞ்சகம் திரைப்படத்தில் சுமந்த் பிரபாஸ் மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

சந்தோஷ் ஜாகர்லபுடி இயக்கத்தில் நடிகர்கள் சுமந்த், சித்து ஜொனலகட்டா, மீனாட்சி கோஸ்வாமி, பிரம்மானந்தம், வெண்ணெலா கிஷோர் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மகேந்திரகிரி வராகி.

வாராஹி கோயிலைச் சுற்றியுள்ள ரகசியங்களை கண்டறிவதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.