அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பதாகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் கடந்த 13ஆம் தேதி 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் புழுதி புயல் வீசியது . குறிப்பாக மும்பையின் வடாலம் பகுதியில் புழுதி புயல் வீசியதன் காரணமாக ராட்சத இரும்பு பேனர் ஒன்று பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இந்த விபத்தில் 67 பேர் மீட்கப்பட்டனர். ராட்சத இரும்பு விளம்பரப் பலகை சரிந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பதாகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பையில் ராட்சத பேனர் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்த நிலையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சாலையோரம், பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிறுத்தங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.