×

உடனே விசாரிக்க உத்தரவு..! நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைப்பு - அமைச்சர் ரமேஷ்..! 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். அவருக்கு மூக்கில் சதை வளர்ச்சி இருந்ததால் அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

நேற்று( மே 22) அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது திடீரென உயிரிழந்தார். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ததால் மாணவி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.

இந்நிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே மாணவி சீதாலட்சுமியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என அவரது பெற்றோர், உறவினர்கள், சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து செவிலியர் மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ். 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ் சென்னையில் இருந்து உயர்மட்ட குழு வந்து விசாரணை நடத்தும்; தவறு நடந்து இருந்தால் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவிகளின் புகார்களை எழுதி வாங்கி இருக்கிறோம், தற்காலிக நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் கூறினார் 