×

ஆசிரியர்களே கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று உள்ளீர்களா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளி மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களும், ஆசிரியர்களும் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்தவில்லை.பள்ளி தலைமை ஆசிரியை ஒப்புதலின் பேரில் கடன் அளிக்கப்படுவதால் மாத சம்பளத்தில் தலைமை ஆசிரியர்கள் கடன் தொகையை பிடித்தம் செய்யாமல் இருக்கின்றனர்.
 

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளி மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களும், ஆசிரியர்களும் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்தவில்லை.
பள்ளி தலைமை ஆசிரியை ஒப்புதலின் பேரில் கடன் அளிக்கப்படுவதால் மாத சம்பளத்தில் தலைமை ஆசிரியர்கள் கடன் தொகையை பிடித்தம் செய்யாமல் இருக்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் கடனைத் திரும்பச் செலுத்தவில்லை. இதன் காரணமாக கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதாக கூட்டுறவு சங்கங்கள் புகார் தெரிவித்து வருகின்றன.

கடன் பெற்ற விவரங்களை ஊதிய சான்றிதழில் மறுத்ததுடன் இதர வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குவதற்கும் தலைமை ஆசிரியர்கள் உதவி வருகின்றனர். இதனால் அரசு பணியாளர்கள், கூட்டுறவு சங்கங்களை பெற்ற கடன்களை திரும்ப செலுத்தாமல் இருப்பது அரசுக்கு இழப்பு என்பதால் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கடனை திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடன் தொகையை பிடித்தம் செய்யாமல் முழு ஊதியம் பெற செய்த தலைமை ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.