காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் நடைபெற்ற 55வது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி. அதாவது விநாடிக்கு 12,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு உரிய நீரை திறக்க கர்நாடகா அரசு முன் வருமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேட்டூர் அணையில் தற்போதைய நிலவரப்படி 40 டி.எம்.சி நீர் இருப்பு தான் உள்ளது. காவிரி டெல்டாவின் சம்பா பட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தவிரவிட்டுள்ள 15 டி.எம்.சி நீர் மிகவும் முக்கியமானதாகும். தென்மேற்கு பருவமழை தொய்வடைந்துள்ள நிலையில் கர்நாட்கா மற்றும் தமிழ்நாடு அரசிற்கு நெருக்கடியான சூழல்உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசு தொடுத்த காவிரி நீர் தொடர்பான வழக்கும் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது குறிப்பிடதக்கது.