☰
×

6029 அரசு பள்ளி ஆய்வகங்களை சரிபார்க்க உத்தரவு

 

தமிழகத்தில் உள்ள 6,029 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் (Hi-Tech Labs) தற்போதைய நிலையை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது. 2019-2020 முதல் 2024-25 வரை 5 ஆண்டுகள் L&T நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஆய்வகங்களின் ஒப்பந்தம் 28.02.2025 அன்று நிறைவடைந்தது.இதனைத் தொடர்ந்து 01.10.2026 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அரசு செயலாளர் ஆய்வுக் கூட்டத்தில், அனைத்து உபகரணங்களும் இயங்கும் நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதன்படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்களது HM Login மூலம் EMIS இணையதளத்தில் Asset Verification மற்றும் Cost Estimation விவரங்களை 12.10.2026-க்குள் பதிவேற்ற வேண்டும். இது தொடர்பாக 8.10.2026 (இன்று) அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினி பணியாளர்களுக்கு இணைய வழி (Online) பயிற்சி நடத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.