#BREAKING 2 நாட்கள் டாஸ்மாக்கை மூட உத்தரவு
நெல்லை மாவட்டம், அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, திருக்கோவில் அருகில் செயல்பட்டு வரும் 3 மதுபானக் கடைகளை 2 நாட்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் கருதி பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. திருவிழாவுக்கு செல்லும் பக்தர்கள் அரசு பேருந்துகளில் மட்டுமே பயணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 13 ஆம் தேதி வ்ரை அரசு சிறப்பு பேருந்தில் செல்லலாம் என்றும், தனியார் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பு, கூட்ட நெரிசல், வனப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம், அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, திருக்கோவில் அருகில் செயல்பட்டு வரும் 3 மதுபானக் கடைகளை 2 நாட்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை (ஆக.11) மற்றும் ஆக.12 ஆகிய 2 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.