×

பாமக மாநாடு- செங்கல்பட்டில் மே.11ம் தேதி மதுக்கடைகளை அடைக்க உத்தரவு

 

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி வரும் 11ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025 ஆம் ஆண்டு மே மாதம் 11.05.2025 (ஞாயிற்று கிழமை) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருவிடந்தை கிராமத்தில் நடைபெறுவதை முன்னிட்டு அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் (FL1. FL2. FL3. FL3A. FL3AA, மற்றும் FL11) மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிம நிறுவனங்களுக்கு 2025 ஆம் ஆண்டு சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும், அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.