தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்
Oct 20, 2025, 17:30 IST
தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்.
இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்று ராமநாதபுரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டைக்கு இன்றும், நாளையும் நாளையும் இதே மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் கணிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.