தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்- மக்களுக்கு அறிவுரை
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மருதூர், திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார். மழை பாதிப்பு குறித்த உதவிக்கு 1077, 70923 00044 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் அம்மன் கோவில் அருகே, திருச்செந்தூர் பிரதான சாலையில் தேங்கியிருந்த மழைநீர் கழிவுநீர் உறிஞ்சும் லாரி மூலம் அகற்றப்பட்டது. மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் குறைக்கும் வகையில், தேங்கியிருந்த நீரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது.