☰
×

நவ.18, 19இல் சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

 

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை(16.11.2026) புயலாகவும், செவ்வாய்க்கிழமை மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்வான் புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 17 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 18 மற்றும் 19 ஆம் தேதி கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நவம்பர் 18ல் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் நவம்பர் 18ஆம் தேதி திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நவம்பர் 20 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.