×

‘இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது’ : ஓபிஎஸ் ட்வீட்!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த
 

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் போரில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலையின் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நினைவுத் ஸ்தூபி அமைக்கப்பட்டது. அது நேற்று இரவோடு இரவாக இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை கண்டித்து, பல்கலைக் கழகத்தின் வாயிலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நினைவுத் ஸ்தூபி இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலர் குரல் எழுப்பி வரும் நிலையில், தற்போது ஓபிஎஸ் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.