“சகுனி ஓபிஎஸ்... என்னை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்”- ஐயப்பன் பேட்டி
அதிமுகவை அழிக்க சகுனி வேலை பார்த்தவர் ஓபிஎஸ் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஐயப்பன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரு மாதத்துக்கு முன்னர் தி.மு.க.வில் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உசிலம்பட்டி ஐயப்பன், இன்று சசிகலா கட்சியில் சேர்ந்தார். சசிகலா முன்னிலையில் அவரது கட்சியில் இன்று இணைந்த உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. ஐயப்பன் அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உசிலம்பட்டி, அரவக்குறிச்சி, ஆம்பூர், அம்பாசமுத்திரம் மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று தி.மு.க.வுக்கு ஆதரவாக பேசிய நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஐயப்பன், திமுகவில் சீட் வழங்கப்படாததால் இன்று ஓ.பி.எஸ்ஸை சரமாரியாக விமர்சித்து விட்டு சசிகலாவின் கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐயப்பன், “ஓ.பன்னீர்செல்வம் என்னை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார். அதிமுகவை அழிக்க சகுனி வேலை பார்த்தவர் ஓபிஎஸ். ஓபிஎஸ் பற்றி அறிந்ததால் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் திமுகவில் முன்பே இணைந்தனர். ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை கரை சேர்க்க தவறிவிட்டார். திமுகவில் இணைந்த பிறகு கூட ஓபிஎஸ் எந்த நிகழ்வுக்கும் என்னை அழைக்கவில்லை” என்றார்.